News January 11, 2026
வெனிசுலா எண்ணெய் இனி இந்தியாவுக்குமா?

வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய எண்ணெயை சார்ந்து இந்தியா இருப்பதை USA விரும்பவில்லை என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், <<18786451>>டிரம்ப்<<>> அறிவித்ததுபோல, இந்த வர்த்தகம் மூலம் கிடைக்கும் பணமும் USA-யிடமே இருக்கும்.
Similar News
News January 29, 2026
ஆச்சரியம்! அற்புதம்!! அனுபமா!!!

நடிகை அனுபமா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், அவரது ஆடையும், போஸும் தனித்துவமாக உள்ளது. காதோர கம்மலில் உள்ள ஹார்ட், கருப்பு உடையில் உள்ள கோல்டு நட்சத்திரம், பச்சை மரம், சிவப்பு இதயம் என அனைத்தும் கவனம் ஈர்க்கிறது. மேலும், தனது பதிவில், அந்த ஆச்சரியத்திற்கு இப்போது அர்த்தம் புரிகிறது என கமெண்ட் செய்துள்ளார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா லைக் போடுங்க.
News January 29, 2026
இனி தலைக்கு குளித்த பிறகு இந்த தப்ப பண்ணாதீங்க..

தலைக்கு குளித்த பிறகு டவல் கட்டும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? இப்படி செய்வதால் அதிகமாக முடி உதிரும் என டாக்டர்கள் சொல்கின்றனர். தலைமுடி ஈரமாக இருக்கும்போது வேர்க்கால்கள் வலுவிழந்து இருக்கும். இந்த சமயத்தில் வெயிட்டான டவலை கட்டினால் முடி வேரோடு உதிரும். எனவே இதனை செய்யாமல் முடிக்கு மெதுவாக ஒற்றியெடுங்கள் போதும். முடியை உலர்த்த வெயிலில் நிற்பதும் சிறந்தது. SHARE.
News January 29, 2026
தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கும் ECI அழைப்பு விடுத்துள்ளது.


