News January 10, 2026

வெனிசுலாவை மீண்டும் தாக்கப் போவதில்லை: டிரம்ப்

image

வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதை டிரம்ப் வரவேற்றுள்ளார். மேலும் அந்நாட்டு அரசு அமைதியை நாடுவது தெளிவாகிறதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்காவும் வெனிசுலாவும் இணைந்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் ஒத்துழைப்பு காரணமாக 2-வது சுற்று தாக்குதல்களை தான் ரத்து செய்துள்ளதாகவும், அது அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 8, 2026

வருமானம் வரும்போதும் கடன் வாங்கும் திமுக அரசு: EPS

image

வறட்சி, கஜா புயல், கொரோனா என்ற பல சோதனைகளிலும் நல்ல நிர்வாகமாக அதிமுக அரசு இருந்ததாக EPS தெரிவித்துள்ளார். ஆனால், வருமானம் வரும் காலத்திலும் திமுக அரசு கடன் வாங்குவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் போதை கலாசாரமே அதிகளவில் உள்ளது என்றார். விவசாயிகளின் தோழனாக அதிமுக இருந்தது என்றும், திமுக ஆட்சியின்போது ஹைட்ரோகார்பன், மீத்தேன் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

News February 8, 2026

டிகிரி போதும்.. வங்கியில் ₹48,480 சம்பளம்

image

SBI-ல் 2050 Circle Based Officers பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இவற்றில் தமிழகம் & புதுச்சேரியில் 165 பணியிடங்கள் உள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு * வரும் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

News February 8, 2026

தங்கம் விலை பெரிய அளவில் குறைகிறது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயராமல் மந்த நிலையில் நீடிக்கிறது. குறைந்த கால முதலீடு நோக்கில் தங்கம் வாங்கி குவித்தவர்கள் பலரும், தற்போது அதனை விற்பனை செய்து வருவதால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. அதன் தாக்கமே சந்தையில் 1 அவுன்ஸ்(28g) ஒரு வாரத்தில் சுமார் $700 வரை குறைந்தது. தற்போது($4,887) என்ற நிலையில் நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் நாளை தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!