News January 9, 2026
வெனிசுலாவின் எண்ணெய் மீதே US-க்கு கண்: டெல்சி ரோட்ரிக்ஸ்

போதைப்பொருள் கடத்தல், மனித உரிமை மீறல் என வெனிசுலா மீது அமெரிக்க வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒரே நோக்கம் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதுதான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்பின் புதிய <<18796166>>எண்ணெய் ஒப்பந்த<<>> திட்டத்தால் வெனிசுலா அரசு டிரம்ப் மீது கடும் கோபத்தில் உள்ளது.
Similar News
News January 9, 2026
நாகை: செல்வம் பெருக இந்த கோயில் போங்க!

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News January 9, 2026
புயல் சின்னம்.. 13 மாவட்டங்களில் மழை அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை, அரியலூர், செங்கை, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். கவனம் மக்களே!
News January 9, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகளை நடத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களே, ரெடியா இருங்க!


