News March 28, 2025
வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற பெண்!

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி(31) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை அடுத்து, காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பூங்கொடி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
நாகை: சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாப பலி

தேப்பிராமங்கலம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (45). இவர் கடந்த 21-ம் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் சந்து வழியாக கொல்லைப்புறத்திற்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து எதிர்பாராத விதமாக ரேவதியின் மேல் விழுந்துள்ளது. இதில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த ரேவதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
News October 24, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
நாகைக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களுக்கு பருவமழையை முன்னிட்டு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை தமிழக அரசு நியமித்து உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அ.அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாகை மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியருடன் இணைந்து மேற்கொள்வார்.


