News October 26, 2024
வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த சிறுவர்களுக்கு எச்சரிக்கை

கானாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பானு (52). இவருக்கு, நேற்று இரவு ஒரு தொலைபேசியில் இருந்து உங்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்து இணைப்பை துண்டித்துவிட்டார். பதறிய பாத்திமா தாம்பரம் காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சோதனை செய்தபோது புரளி என தெரிந்தது. பின்னர் விசாரணையில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் போன் செய்து மிரட்டல் விடுத்தது தெரிந்தது.
Similar News
News August 11, 2025
ஏசி மின்சார பேருந்து சேவை தொடக்கம்

சென்னையை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏசி மின்சார பேருந்து சேவை செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 233 கோடி மதிப்பீட்டில் 55 ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
News August 11, 2025
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் விரைவில் ஆய்வுகளைத் தொடங்கி, மழை பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
News August 10, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 10) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.