News December 13, 2025

வெங்கமேடு பகுதியில் தூக்கு போட்டு பெண் தற்கொலை!

image

கரூர், வெங்கமேடு தங்கநகர் பகுதியில், சுசிலா(60), என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் நேற்று மன விரக்தியில் இருந்த சுசிலா தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து வெங்கமேடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News

News December 19, 2025

கரூர்: 8வது போதும்..அரசு வேலை!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!

News December 19, 2025

கரூர்: ரூ.1 லட்சம் மானியம் – கலெக்டர் அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 40 சதவீதம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

கரூர்: மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

image

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (டிச.20) தென்னிலை, க.பரமத்தி, நொய்யல், ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆண்டிசெட்டிப்பாளையம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், தென்னிலை, மொஞ்சனூர், பூலாம்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், குளத்துபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்காது.

error: Content is protected !!