News October 21, 2025
வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு ஆட்சியர் அஞ்சலி

நீலகிரி மாவட்டம், உதகை ஏ.ஆர் வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வீர மரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 22, 2025
நீலகிரி: மின்னொளியில் ஜொலிக்கும் மலை ரயில் நிலையம்!

குன்னூர் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது குன்னூர் ரயில் நிலையம் தீபாவளி திருநாளில் கொண்டாடும் வகையில் ரயில் நிலையம் முழுவதும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அற்புதமாக தெரியும் இக்காட்சிகளை குன்னூர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
News October 22, 2025
நீலகிரி: மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய எஸ்.பி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா., இன்று காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.