News March 15, 2026
வீர மகனின் கடைசி நிமிடங்கள்.. உருக்கமான PHOTOS

நாட்டுக்காக உயிர்நீத்த ஒரு மக்கள் நாயகனுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட போட்டோக்கள்தான் இவை. மேற்குவங்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் <<19385403>>அஜய் ஜெய்ஸ்வாலின்<<>> உடல் ராணுவ மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த வீரனின் கடைசி தருணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை SM-ல் பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரை போன்ற வீரனின் துணிச்சலுக்கு என்றுமே மரணமில்லை. SALUTE
Similar News
News April 10, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,000 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளது. 1 அவுன்ஸ் $36 குறைந்து $4,751-க்கு வர்த்தகமாகிறது. இதனால் வரும் நாள்களில் தங்கம் விலை குறையும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், வெள்ளி விலையும் $0.58 டாலர் குறைந்து $75.68 என விற்பனையாகிறது.
News April 10, 2026
நாம் தமிழருக்கு ஆதரவாக சேரன் பரப்புரை

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை இயக்குநர் சேரன் ஆதரித்து முதல்முறையாக பிரசாரம் செய்துள்ளார். தனது x பக்கத்தில், நமக்காக குரல் கொடுத்து சேவை செய்ய தகுதியானவர்களான இடும்பாவனம் கார்த்திக் (வேதாரண்யம்), கார்த்திகேயன் (பல்லாவரம்) ஆகியோரை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போதுதான் எளிய மக்களுக்கான குரல் சட்டப்பேரவையில் பேசப்படும்; அரசின் காதுகளுக்கும் எட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
News April 10, 2026
வியர்வையால் ஏற்படும் அட்டகாசமான நன்மைகள்

சம்மர் சீசனின் பெரிய பிரச்னையான வியர்வையால் சில நன்மைகளும் உள்ளது. ➤வியர்வை சுரப்பதால், உடலின் வெப்பநிலை குறைகிறது ➤வியர்வை சருமத்தை பளபளப்பாக்கும். கூடுதலாக சருமத்தின் செல்களுக்கு ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் ➤கடினமான உழைப்பால் தான், அதிகப்படியான வியர்வை வெளியேறும். அது இதயத்திற்கு நல்லதே. ஆனால், அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது என்றால் டாக்டரிடம் ஆலோசிப்பது நல்லது. SHARE.


