News March 19, 2026

வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. அரசு அறிவிப்பு

image

தமிழகத்தில் ஒரு பக்கம் மழை பெய்தாலும், இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டாயத் தேவை இருந்தால், பருத்தி ஆடைகள் அணிந்து குடையுடன் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT

Similar News

News April 8, 2026

BREAKING: அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

image

விலை சரிவில் தானே உள்ளது பொறுமையாய் தங்கம் வாங்குவோம் என காத்திருந்தவர்களுக்கு சர்வதேச சந்தை நிலவரம் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் சூழல் சற்று தணிந்ததால் தற்போது 1 அவுன்ஸ்(28g) 158 டாலர்கள் உயர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 8% உயர்ந்து 1 அவுன்ஸ் 77 டாலர்களாக மாறியுள்ளது. வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

News April 8, 2026

விரக்தியால் EPS இப்படி பேசுகிறார்: திருமாவளவன்

image

திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்த விரக்தி & ஆத்திரத்தில் EPS பேசி வருவதாக திருமாவளவன் சாடியுள்ளார். கூட்டணி மீதான விரக்தியால் மட்டுமே தனிமனித விமர்சனத்தை EPS முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொள்கை அடிப்படையில் முரண்பட்டிருக்கும் அதிமுக, பாஜகவுடன் தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே சேர்ந்துள்ளதாகவும் திருமா தெரிவித்துள்ளார்.

News April 8, 2026

BREAKING: திருப்பரங்குன்றம் வழக்கில் ஏற்பட்ட திருப்பம்

image

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை தொடர்பான எந்த வழக்குகளையும் தனி நீதிபதி GR சுவாமிநாதன் விசாரிக்க தடை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதிப்பதாக இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!