News November 1, 2025

வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

image

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.

Similar News

News November 2, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 2, ஐப்பசி 16 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News November 2, 2025

வெற்றியை பார்க்க ஆவலுடன் உள்ளோம்: ஹர்மன்ப்ரீத்

image

தோல்வி என்பது எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் வெற்றி எப்படி இருக்கும் என்பதை அறிய மிகவும் ஆவலுடன் உள்ளதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். இன்று உலகக் கோப்பை மகளிர் போட்டியின் ஃபைனலில், தெ.ஆப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே போட்டாபோட்டி போடும் என்பதால், விறுவிறுப்பாக இருக்கும். இந்தியா வெல்லுமா?

News November 2, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!