News July 8, 2025
வீட்டு வாடகை ஒழுங்குமுறை சட்டம் சொல்வது என்ன? (2/2)

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கான புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News July 8, 2025
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வருகிற 09.07.2025 அன்று காலை 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், இண்டுர் உள்வட்டம். சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
தர்மபுரியில் இரவு ரோந்து செல்லும் போலீஸ் விவரங்கள்!

தர்மபுரி மாவட்ட காவல்துறை 08.07.2025 தேதிக்கான இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் விபரங்களை வெளியிட்டுள்ளது. மாவட்ட ரோந்து அலுவலராக கே.எம். மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொறுப்பான இரவு ரோந்து அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைக்காக தொடர்புக் கொள்ளலாம்.
News July 8, 2025
தருமபுரி அரசு கலை கல்லூரியில் கல்லூரி சந்தை

தருமபுரி அரசு கலை & அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாவட்ட வழங்கல் & விற்பனை சங்கத்தின் மூலம் பொருட்கள் விற்பனை & கண்காட்சி இன்று முதல் ஜூலை 10 வரை நடைபெறுகிறது. இந்த கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று காலை துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.