News August 20, 2025

வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டப் பகுதிகளில் வீட்டுமனை மற்றும் குடியிருப்புகளைப் பெற்றவர்களில், வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியவர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. என கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்தி, தங்கள் பெயருக்கான கிரையப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்

Similar News

News January 26, 2026

BREAKING: கோயம்புத்தூருக்கு 3-ம் பரிசு

image

நாட்டின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தமிழ்நாட்டின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களுக்கு CM ஸ்டாலின் பரிசு வழங்கினார். அதில் கோவை காவல்நிலையத்திற்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மதுரை முதலிடம் மற்றும் திருப்பூர் 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

News January 26, 2026

மேட்டுப்பாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இருவர் காரில் மதுபோதையில் ஊட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது, கல்லாறு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 26, 2026

கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று தீவிர பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகள், பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்கள் மற்றும் ரயில் தண்டவாளப் பாதைகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

error: Content is protected !!