News August 30, 2024
வீட்டு மனை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; “மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் அனைத்து மனைகள், மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www/inlayoutillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணக்கலாம்.
Similar News
News April 30, 2025
மாணவியிடம் நகை பறித்த பெண்கள்; 4 பேர் கைது

புதுக்கடை அருகே தும்பாலி, ஆத்திவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி தையல் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மாணவியைப் பிடித்து தாக்கி அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி, சந்தோஷ், மஞ்சுளா, வளையாபதி ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 29, 2025
கன்னியாகுமரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
News April 29, 2025
95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர்

தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.