News March 13, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது. இது மக்களிடையே நிலவும் அச்சங்களை போக்கும். SM-களில் பரவும் வதந்திகளை கண்காணித்து, அதன் உண்மைநிலையை விளக்க உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விற்பனையில் தட்டுப்பாடு இல்லை என அரசு விளக்கமளித்துள்ளது.
Similar News
News March 29, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. ஸ்டாலின் சொன்ன HAPPY NEWS

திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட ஸ்டாலின், மகளிர் வங்கி கணக்கில் சர்ப்ரைஸாக ₹5,000 டெபாசிட் செய்தது குறித்து பேசினார். அப்போது, இத்திட்டத்தை பாஜக முடக்க நினைத்ததாகவும், அந்த சதியை முறியடித்து 3 மாத மகளிர் உரிமைத் தொகை மற்றும் ₹2,000 கோடை சிறப்பு நிதியை வழங்கியதாக கூறினார். தற்போது, மகளிர் உரிமைத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தியும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
News March 29, 2026
காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் போட்டி

திமுக கூட்டணியில் 8 இடங்களை பெற்ற விசிகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. கட்சியின் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். அதேபோல், சிந்தனைச் செல்வன் (செய்யூர்) வன்னியரசு (திண்டிவனம்), எழில் கரோலின் (அரக்கோணம்) , பன்னீர்தாஸ் (திருப்போரூர்),
அப்துல் ரகுமான் (பண்ருட்டி), மாலதி (கள்ளக்குறிச்சி), சக்திவேல் (பெரியகுளம்) ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
News March 29, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. SHARE IT


