News January 7, 2026

வீட்டுக்கு ஒரு விஜய்: JCD பிரபாகர்

image

மக்களை காப்பாற்றக்கூடிய கரம் விஜய்யிடம் இருக்கிறது என JCD பிரபாகர் கூறியுள்ளார். 1972-ல் MGR தொடங்கிய அதிமுக 1973-ல் இடைத்தேர்தலில் வென்றதை மேற்கோள்காட்டிய அவர், அதேபோல தவெகவும் தேர்தலில் வெல்லும் என்றார். மேலும், மக்கள் மனதில் நிரந்தரமாக இடம்பெறக்கூடிய தலைவராக விஜய் இருக்கிறார் என்றும், இன்று வீட்டுக்கு ஒரு விஜய் உருவாகிவிட்டார் எனவும் பேசியுள்ளார். உங்கள் வீட்டில் ஒரு விஜய் இருக்கிறாரா?

Similar News

News February 6, 2026

சைபர் மோசடி.. ₹25 ஆயிரம் வரை இழப்பீடு

image

சிறிய அளவிலான டிஜிட்டல், சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை சீரமைத்து வருவதாக RBI அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன்படி ₹25,000 அல்லது இழந்த தொகையில் 85%, இதில் எது குறைவோ அந்த தொகை இழப்பீடாக வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் இந்த பலனை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

News February 6, 2026

FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில், கடந்த 2 நாள்கள் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியாகவே அமைந்துள்ளது. பிப்.4 அன்று 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,19,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, சவரனுக்கு ₹5,200 குறைந்து ₹1,14,000-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் 2 நாள்களில் கிலோவுக்கு ₹40,000 குறைந்து ₹2.80 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

News February 6, 2026

அதுதான் கார் ரேஸ் மீது எனக்கு ஆர்வம் வர காரணம்: அஜித்

image

தனது தந்தையின் நண்பர்களில் சிலர் இந்திய மோட்டார் ரேஸில் கலந்துகொள்வார்கள்; அப்படித்தான் கார் ரேஸ் மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக அஜித் குமார் கூறியுள்ளார். மேலும் விஜய் மல்லையாவின் அணியில் ரேஸ் ஓட்டும் ஒருவரது நிறுவனத்தில்தான் தனது தந்தை பணியாற்றியதாகவும் கூறினார். தனது வீட்டுப் பக்கத்தில் இருந்த ரேஸ் கார்களை பார்த்து பார்த்து 7,8 வயதிலேயே அதன் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!