News December 25, 2024
வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த நபர்

பவானி அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (67). இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் நேற்றும், இன்றும் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் உறவினருக்கு தகவல் அளித்தனர். பின் வீட்டின் மேல் ஏறி உள்ளே சென்று பார்த்தபோது, தலைப்பகுதியில் இரத்தம் வழிந்த நிலையில் செல்வராஜ் மர்மமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
ஈரோட்டில் வங்கி வேலை வேண்டுமா? CLICK NOW

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 14, 2025
ஈரோடு: ’ஆக.15’ இதைக் கண்டால் உடனே CALL!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேற்று (13.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர், பணியாளர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் உள்ளனர்.