News August 19, 2025
வீட்டில் நுழைந்த 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு

வேலூர் சத்துவாச்சாரி, சூப்பர் மார்க்கெட் தெருவில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரது வீட்டில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Similar News
News August 19, 2025
வேலூர்: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க!

✅வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
✅தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
✅சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
✅கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
✅வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க… SHARE பண்ணுங்க..
News August 19, 2025
வேலூரில் இலவசமாக பட்டா பெறலாம் 1/2

வேலூரில் சொந்த வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, ‘இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்’ திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருந்தால், சென்னை மாநகராட்சி மக்களுக்கு 1 செண்டு நிலம் இலவசமாக பெற முடியும். <<17451644>>விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் பண்ணுங்க.<<>> ஷேர் பண்ணுங்க.
News August 19, 2025
வேலூரில் இலவசமாக பட்டா பெறலாம் 2/2

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 5 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க