News March 8, 2025

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் யாசீர். இவர், நேற்று (மார்.8) காலை வெளியே சென்றுள்ளார். அப்போது, மனைவி ஆயிஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டிற்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 10, 2025

திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் சிவகாமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மேலும் சில வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என எடுத்துரைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News September 10, 2025

திருப்பத்தூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 9, 2025

திருப்பத்தூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!