News March 31, 2025
வீட்டில் செல்வம் பெருக செய்யும் அற்புத கோயில்

சென்னை வடதிருமுல்லைவாயலில் மாசிலாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தலத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்தால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், குடும்ப நலம், உடல் நலம், செல்வம் பெருக பக்தர்கள் இங்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். மேலும், இந்த காரியம் அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பணப்பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 6, 2026
சென்னையில் நாளை மின்தடை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.07) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஸ்டான்லி, கத்திப்பாரா, மாதவரம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. உடனே ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
சென்னை: தாய்க்கு எமனாக மாறிய மகன்!

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஆக்ஸிலா (55) இவரது மகன் பிரிட்டோ (28) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் வேலை இல்லாமல் இருப்பதால், குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆக்சிலா, மகனிடம் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இன்று ஏற்பட்ட தகராறில் நிகில் பிரிட்டோ, தாயை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார்.
News February 6, 2026
வில்லிவாக்கம்: ஏ.டி.எம்-இல் கொள்ளையடிக்க முயற்சி

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


