News January 25, 2026

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமா?

image

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் காமதேனு பசுவின் சிலையை வைத்தால், பணப் பற்றாக்குறை வராது என நம்பப்படுகிறது. வீட்டின் வடக்கு திசையில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் உலோக ஆமையை வைத்திருப்பது செழிப்பை தரும். வெள்ளி யானையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டில் உடைந்த அல்லது சேதமடைந்த சிலைகளை வைத்திருக்க கூடாது எனவும் கூறப்படுகிறது.

Similar News

News April 2, 2026

கண் பார்வைக்கு உகந்த கொடி பசலைக் கீரை

image

கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து, புரதம் நிறைந்த கொடி பசலைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. இதை சாப்பிடுவதால் *இரத்த அழுத்தம் கட்டுப்படும் *எலும்புகள் & பற்கள் வலிமையாகும் *மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் *தசை வலி & உடல் வலி குறையும் *கண் பார்வை மேம்படும். காய்ச்சல் பாதிப்பு, இருமல் பிரச்னைக்கு கொடி பசலைக் கீரையை அரைத்து ஜூஸ் போல் குடிக்கவும்.

News April 2, 2026

ஹார்முஸ் நீரிணையில் வசூலை தொடங்கிய ஈரான்

image

ஹார்முஸ் நீரிணையை கடக்க கப்பல்களிடம் ஈரானின் IRGC கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. ஒரு பேரல் எண்ணெய்க்கு ஒரு டாலர் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வழியாக கப்பல் இயக்குபவர்கள், IRGC-ஐ தொடர்பு கொண்டு செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும். அக்கப்பலுக்கு US, இஸ்ரேலுடன் தொடர்பில்லை என உறுதிப்படுத்திய பிறகு ஹார்முஸ் நீரிணையை கடக்க Permit Code அளிக்கப்படுகிறது.

News April 2, 2026

ஏப்ரல் 2: வரலாற்றில் இன்று

image

*உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் *1881 – இந்திய விடுதலைப் போராட்டக்காரர் வ.வே.சு.ஐயர் பிறந்தநாள் *1884 – தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பிறந்தநாள் *1924 – நாதஸ்வர கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் பிறந்தநாள் *1984 – விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றார் *2011- 28 ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது

error: Content is protected !!