News April 14, 2024

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

image

உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் இன்று உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சக்திவேல் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 14, 2026

கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி!

image

சோமண்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் (58), கடந்த 5-ம் தேதி தனது பைக்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு வேப்பூர் சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News February 14, 2026

கள்ளக்குறிச்சி: மர்மமுறையில் 10 சவரன் நகை திருட்டு!

image

சங்கராபுரம் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கபார்கான். இவரது மனைவி இலாள் (56). சம்பவத்தன்று இவரது வீட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை மர்மமான முறையில் காணாமல் போனது.
இதுகுறித்து இலாள் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டதா எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!