News February 14, 2026
வீட்டிலிருந்தே சிவராத்திரி வழிபாடு.. எப்படி?

மகா சிவராத்திரி அன்று கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தே சிவனை வழிபடலாம். இரவு சிவனை மனதில் நினைத்து, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்யவும். இந்த நேரத்தில் பூமியை நோக்கி பாயும் கதிர் வீச்சானது நமது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், வீட்டிலிருந்தே சிவராத்திரி நன்மையை பெற முடியும்.
Similar News
News February 19, 2026
தேமுதிகவுக்கு 10+1 .. அப்போ கூட்டணி கட்சிகளின் நிலை?

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையாமல் போனதற்கு ராஜ்யசபா சீட் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு 10 MLA + 1 RS சீட்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேலை தேமுதிகவுக்கு 10+1 திமுக வழங்குமேயானால், பல ஆண்டுகளாக திமுகவுடன் பயணிக்கும் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதை எப்படி எடுத்து கொள்ளும் என கேள்வி எழுந்துள்ளது.
News February 19, 2026
மகளிர் வங்கிக் கணக்கில் ₹4000 .. ஹேப்பி நியூஸ்

கோடைகால சிறப்பு நிதியாக இனி ஆண்டுதோறும் மகளிருக்கு <<19184435>>₹2,000<<>> வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 மாத மகளிர் உரிமை தொகையுடன், கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து, மகளிரின் வங்கி கணக்கில் ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மே மாதத்தில் மட்டும் தேர்தல் வாக்குறுதியின்படி உயர்த்தப்படவுள்ள மகளிர் உரிமை தொகை ₹2,000, கோடைகால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹4,000 வழங்கப்படும்.
News February 19, 2026
காங்கிரஸை சாடிய வைகோ

மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தான் தலைமை ஏற்க வேண்டுமென பிற மாநிலங்களில் இருந்து குரல்கள் வருவது திமுகவுக்கு பெருமை; இதனால் கூட்டணி கட்சிகளும் பெருமையடைகிறோம் என பேசியுள்ளார். மேலும், காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் 9 குரல் கொடுப்பார்கள், அவற்றுக்கெல்லாம் பதில் கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.


