News February 27, 2025
வீட்டிலிருந்து துர்நாற்றம் – சடலமாக தொங்கிய நபர்

நேற்று (பிப்.26) திருச்சி போலீஸ் காலனியைச் சேர்ந்த ரவிசங்கர் அவரது தந்தையை பிரிந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரவிசங்கர் தூக்கில் சடலமாக கிடந்தார். உடனே, தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

திருச்சி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
திருச்சி: விமானம் ரத்து – அவசர எண்கள் அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள், ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக தொடர்ந்து 5-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகள் தங்களது விமான பயணம் குறித்த நேரடி தகவல்களை பெறுவதற்கு 0431-2341755, 0431-2341766, 93116-20097 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 6, 2026
திருச்சி: காய்ச்சலால் 1 வயது குழந்தை உயிரிழப்பு

முசிறி அருகே மணலி அய்யம்பட்டியைச் சேர்ந்த அனன்யா என்ற 1 வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


