News August 18, 2024
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரை சார்ந்தவர் பிரசன்னா( 39) இவர் யுபிஎஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மனைவியின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார். இன்று காலை மேல் மாடியில் குடியிருக்கும் இவரது தாய் பிரேமா வீடு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 35 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
Similar News
News October 25, 2025
தாம்பரம்: நிறுத்தப்பட்ட 6 ரயில் சேவை தொடக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 மின்சார ரயில்களின் சேவை கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நாளை முதல் இயங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – கடற்கரை காலை 11:00, கடற்கரை – தாம்பரம் பகல் 11:52, 12:02, 12:15, செங்கை – கு.பூண்டி காலை 9:50, கடற்கரை – செங்கை பகல் 12:28.
News October 25, 2025
செங்கை: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

செங்கை : வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <
News October 25, 2025
செங்கையில் பரவி வரும் டெங்கு ; உஷார்!

வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலையில், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு இருந்த பாதிப்பு, தற்போது 60க்கும் மேல் பதிவாகி வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் பாதிப்பு, இரட்டிப்பாகும் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


