News January 17, 2025

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

image

திருப்பூர், திருமுருகன் பூண்டியை அடுத்த தேவாரம் பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் திருமுருகன் பூண்டி நகராட்சியில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 1.5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News August 21, 2025

திருப்பூர் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில், மங்களம் சாலை மற்றும் சிறுபூலுவப்பட்டியை பகுதியை இணைக்க கூடிய வகையில், ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது‌. மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா ரவுண்டானா வருகின்ற பகுதியில், சோதனை அடிப்படையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 20.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடபட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், முருகம்பாளையம், கல்லம்பாளையம், சாமிநாதபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!