News April 9, 2024
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் தசரத நகரில் தனியாக வசித்து வருபவர் சரஸ்வதி (72). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு தனது மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் இரவு மர்ம நபர்கள் மூதாட்டியின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே வீட்டின் பூட்டை உடைக்க முடியாத நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 10, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (10/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும். கண்டிப்பாக தேவைப்படும்.
News April 10, 2025
திருவள்ளூரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாகும்

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்து 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக காணப்படும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். இது குறித்து அவர், ‘ராயலசீமா, வட கர்நாடக பகுதியில் இருந்து வெப்ப அலை தமிழ்நாட்டின் நோக்கி வர வாய்ப்புள்ளதால் வெப்பம் அதிகமாக காணப்படும்’ என தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாட்களுக்கு வெளியே செல்பவர்கள் குடை எடுத்து செல்லவும். *நண்பர்களையும் உஷார் படுத்தவும்*
News April 10, 2025
திருவள்ளூர் ராணுவ தொழிற்சாலையில் வேலை

திருவள்ளூவர் மாவட்டம் ஆவடியில் உள்ள மத்திய அரசின் ராணுவ இன்ஜின் பேக்டரியில் பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, B.E/B.Tech, MBA, M.E/M.Tech, ICAI, ICMAI படித்த 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,000-ரூ.30,000 வரை வழங்கப்படும். மேலும், தகவலுக்கு <