News April 7, 2024
வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பழைய ஜெயங்கொண்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் வேம்படி மகன் ராஜு (62). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மது விற்ற ராஜூ மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News January 25, 2026
கரூர்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

கரூர் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே<
News January 25, 2026
கரூரில் நாளை செயல்படாது!

கரூர் மாவட்டத்தில் நாளை (ஜன. 26) குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சந்தையில் மதுபானத்தைப் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 25, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுத்துள்ள அறிவிப்பில், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் கனவுகளைப் பகிர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9498042408 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi எனத் தட்டச்சு செய்தோ அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ விவரங்களைப் பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 09.02.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


