News January 16, 2026
வீடு வாங்க போறீங்களா? Must Read this

மத்திய பட்ஜெட் 2026-ல் மலிவு விலை வீடுகள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை ரியல் எஸ்டேட் துறையினர் முன்வைத்துள்ளனர். தற்போதைய ₹45 லட்சமாக உள்ள மலிவு விலை வீடுகளின் வரம்பை ₹75-₹95 லட்சமாக உயர்த்த வேண்டும், வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். மேலும், வீட்டுக் கடன் மீதான வட்டி விலக்கை, ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
Similar News
News January 23, 2026
உசைன் போல்ட் பொன்மொழிகள்

* உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். * நான் தொடக்கத்தைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தினேன், முடிவுதான் முக்கியமானது. *மீண்டும் செய்வது எல்லாவற்றையும் விட கடினமானது. *சில நேரங்களில் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறீர்கள். *ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கருத்தைக் கொண்டிருக்க உரிமை உண்டு.
News January 23, 2026
வரலாறு படைத்த ‘Sinners’

மைக்கேல் பி. ஜோர்டான் நடிப்பில் ரியான் க்ளூகர் இயக்கிய ‘Sinners’ திரைப்படம், ஆஸ்கார் விருதுகளுக்கு 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. இதற்குமுன்பு, All About Eve(1950), Titanic(1997), La La Land (2016) ஆகிய திரைப்படங்கள் தலா 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. ‘Sinners’ அந்த படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. இந்த திரைப்படம் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றது.
News January 23, 2026
Sports 360°: பி.வி.சிந்து அபார சாதனை

*பேட்மிண்டன் வரலாற்றில் 500 வெற்றிகளை பதிவு செய்த முதல் IND வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார். *முதல் தர கிரிக்கெட்டில் ஜலஜ் சக்ஸேனா 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். *இங்கி.,க்கு எதிரான முதல் ODI-ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி. *இந்தோனேஷிய பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு தகுதி. *ரஞ்சி போட்டியில் ஒடிசாவுக்கு எதிராக TN முதல்நாள் முடிவில் 281 ரன்கள் எடுத்துள்ளது.


