News April 10, 2024
வீடு புகுந்து வெட்டி கொலை: 3 பேர் கைது

பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு சுந்தர சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரை முன் விரோதம் காரணமாக ஆரோக்கியசாமி தனது கூட்டாளிகளான சரவணன், விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து நேற்று நள்ளிரவில் விஜயகாந்தின் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து திருவேற்காடு போலீசார் ஆரோக்கியசாமி, சரவணன், விக்னேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர் அடுத்த பட்டறைபெருமத்தூர் பகுதியில் திருப்பதி நெடுஞ்சாலை சுங்கச்சவாடி செயல்பட்டு வருகிறது. அதில், பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் கண்டெய்னர் அறையில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீப் பிடித்தது. பணியில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அறையில், சாமிப் படத்திற்காக ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து தீப் பிடித்தது தெரிய வந்தது.
News February 11, 2026
திருத்தணி பகுதிகளில் மின் தடை!

திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று(பிப்.11) காலை 9:00 – மாலை 5:00 வரை நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுக்குத்தகை, சி.டி.எச்.ரோடு, வேப்பம்பட்டு, அயத்தூர், இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல் குப்பம், பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லூர், கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. <<19106967>>தொடர்ச்சி<<>>
News February 11, 2026
கே.ஜி.கண்டிகை பகுதிகளில் மின் தடை

கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று(பிப்.11) காலை 9:00 – மாலை 5:00 வரை, கே.ஜி.கண்டிகை, செருக்கனூர், புச்சிரெட்டிப்பள்ளி, கிருஷ்ணசமுத்திரம், வீராநல்லூர், கோரமங்கலம், மதுராபுரம், சிறுகுமி, எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, எஸ்.பி.கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் மேடு, வங்கனூர், அம்னேரி, கொண்டாபுரம் மற்ரும் அதன் சுற்றுவட்டாரங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


