News January 15, 2025
வீடு புகுந்து சரமாரியாக வெட்டி ரவுடி கொலை

காசிமேடு திடீர் நகரில் ரவுடி லோகநாதன் நேற்று (ஜன.14) மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த லோகநாதன் மற்றும் மாலதியை, மர்ம நபர்கள் 9 பேர் வெட்டியதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாலதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
சென்னை: காதலி பேச மறுத்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை!

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்டோ சுஜன் (19) பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவருடன் டியூஷனில் படித்த மாணவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் ஆண்ட்டோ சுஜானிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜன் நேற்று முன்தினம் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
சென்னை – தொடர் விடுமுறை பேருந்து கட்டணங்கள் உயர்வு

கிறிஸ்மஸ் (ம) புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணங்கள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மூன்று மடங்கு உயர்ந்துள்ளன. திருநெல்வேலி (₹2000–₹4500), கோயம்புத்தூர் (₹3000–₹5000), மதுரை (₹4000 வரை), நாகர்கோவில் (₹4000 வரை), திருச்சி (₹3600 வரை) விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் நாளை டிச.23 ஆம் தேதியுடன் தேர்வுகளும் முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.