News August 12, 2024
வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கல்

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முதற்கட்டமாக 370 நபர்களுக்கு ரூபாய் 3.50 லட்சம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஸ் பிரகாஷ், ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 10, 2025
ராணிப்பேட்டை: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அரசு ஊழியர்!

அரிகலபாடி பாளையக்கார கண்டிகையை சேர்ந்தவர் ரமேஷ் (40) மருத்துவமனை ஊழியராக உள்ளார். இவர் தனது மனைவி, 2 மகன்களுடன் நேற்று (நவ.9) கல்லாற்றில் குளிக்க சென்றார். மூத்த மகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவனை காப்பாற்ற கல்லாற்றில் குதித்தார். அவரது மூத்த மகனை மீன் பிடித்தவர்கள் காப்பாற்றிய நிலையில், ரமேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் ரமேஷை தேடி வருகின்றனர்.
News November 10, 2025
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு காவல்துறை ரோந்து

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
காவலர் தேர்வு மையங்களை அதிகாரிகள் ஆய்வு

இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு மையங்களை காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


