News April 28, 2025
வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 25, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உள்ளாட்சிகள் தினமான நவ.01 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டங்களில் விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News October 25, 2025
காஞ்சிரம் அருகே புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை!

காஞ்சி, கண்ணந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்(25). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்ததால் திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட மகேஷ், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News October 25, 2025
ஹஜ் பயணம்; ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஹஜ் 2026 புனித பயணத்திற்காக தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளுக்கு சேவை செய்ய மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மத்திய, மாநில அரசு மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள் www.hajcommittee.gov.in-ல் 03.11.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.


