News April 29, 2025

வீடியோ எடுத்துவைத்து மிரட்டிய இருவர் கைது

image

சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் எருக்கஞ்சேரியை சேர்ந்த கிஷோர் (22), முகமது அலி (22) ஆகியோர் சமூகவலைத்தளம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும், சிறுமியிடம் பேசியதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, தாங்கள் அழைக்கும் இடத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர், போலீஸார் பெண் குரலில் பேசி சேலத்திற்கு வரவழைத்து கைது செய்தனர்.

Similar News

News April 29, 2025

செவ்வாய்க்கிழமையில் போக வேண்டிய அம்மன் கோயில்கள்

image

▶திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், ▶ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில், ▶எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன் கோயில், ▶கொளத்தூர் லட்சுமி அம்மன் கோயில், ▶சிந்தாதிரிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயில், ▶சேத்துபட்டு கருமாரியம்மன் கோயில், ▶திருவல்லிக்கேணி நாகாத்தம்மன் கோயில், ▶பாடி படவட்டம்மன் கோயில், ▶பெரம்பூர் மொண்டி மாரியம்மன் கோயில், ▶பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில், ▶மெட்ராஸ் காளி பாரி. *SHARE*

News April 29, 2025

200 இடங்களில் ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’

image

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ரோபோடிக் போலீசை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்பு சாதனம் தற்போது சென்னை நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள்., வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளது.

News April 28, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் 

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (28.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

error: Content is protected !!