News March 31, 2025
வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் எனக் கூறி, மனு தாக்கல் செய்தவருக்கும் ரூ.12,000 இழப்பீடாக வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 2, 2025
பிரபல கொள்ளையர்கள் கைது

ஆட்டோவில் தனியாக பயணிகப்பவர்கள் மற்றும் சாலையில் தனியாக நின்று கொண்டிருக்கும் அல்லது நடந்து செல்பவர்களை குறிவைத்து கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த புகாரில், தண்டயார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் விக்னேஷ் இருவரை கைது செய்தனர். 100 சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சினல்களை ஆய்வு செய்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
News April 2, 2025
சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

சென்னையில் இன்று (01.04.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 1, 2025
சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகம்.