News April 10, 2024
விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

மணலி விரைவு சாலையில் தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ட் லிமிடெட் (டி.பி.எல்) என்ற கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று கூலி தொழிலாளர்கள் இருவர் இங்குள்ள டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

செங்குன்றம் அலமாதி 16வயது சிறுமியை 6ஆண்டுக்கு மேல் சொந்த சித்தப்பா வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்த புகாரை செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உத்தாசனப்படுத்தியுள்ளார். சொந்த சித்தப்பா ஜலாலுதீன் பாலியல் வன்கொடுமையால் தற்போது 4மாத கர்ப்பிணியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் GHதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
News July 4, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 4, 2025
கர்ப்பிணியை தாக்கிய காவலர்

கனகம்மாசத்திரம் சிவாஜி என்பவர் மதுமிதாவிற்கு போனில் தகாத வார்த்தையால் குறுஞ்செய்தி அனுப்பியதாக மதுமிதா, 2தோழிகளுடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளனர். அப்போது காவலர் ராமர் மூவரை தாக்கியுள்ளார். காவலர் தாக்கிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. TNமனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சம்பவம் குறித்து 6வாரங்களில் விரிவான அறிக்கை தர திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு உத்தரவு.