News April 26, 2025

விஷம் அருந்திய பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

image

கயத்தாறு அருகே உள்ள திருமங்கல குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது 15 வயது மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என மனமுடைந்த சிறுமி கடந்த 18ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 26, 2025

ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

News April 26, 2025

தூத்துக்குடி: இன்று ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

ஸ்ரீவைகுண்டம் – திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் நவதிருப்பதிகளில் ஒரு தலமாகும். இக்கோயிலில் இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.

News April 26, 2025

அழிந்து வருகிறதா பவளப்பாறைகள்?

image

மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள 21 தீவுகளில் அதிகம் காணப்படும் மிக அரிய கடல் வாழ் உயிரினமான பவளப்பாறைகள், மீன்களுக்கு சிறந்த உரைவிடமாகவும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இப்பகுதிகளில் சுமார் 110 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பவளப்பாறை காலணிகள் இருந்தன. ஆனால் தற்போது பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவைகளால் 35 கிலோமீட்டர் பரப்பளவில் பவளப்பாறைகள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!