News April 15, 2025

விஷச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்- சிபிஐ

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 15, 2025

கள்ளக்குறிச்சி: போலீசார் சிறுமியிடம் அத்துமீறல்

image

கரியாலூரில் காவல் நிலையம் உள்ளது, இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர் தனது வழக்கு விசாரணைக்காக ஒருவரை கைது செய்திருந்தார். கைது செய்யப்பட்டவரின் மகள், தனது தந்தையை பார்க்க வந்த போது 17 வயது சிறுமியிடம் காவலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி டிஐஜி அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காவலரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 15, 2025

கள்ளக்குறிச்சி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க

✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்

✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்

✅ Return Policy,Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்

✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,

நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் <<>>குற்றப்பிரிவு மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.SHARE IT

News September 15, 2025

கள்ளக்குறிச்சி: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் டி.எஸ்.பி 99948 98628, இன்ஸ்பெக்டர் – 94981 68555 அலுவலக தொலைபேசி – 04251 294600 மின்னஞ்சல்: dspkkidvac.tnpol@gov.in அலுவலுக முகவரி: RR ரைஸ் மில், AKT பள்ளி அருகில், கள்ளக்குறிச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!