News April 26, 2025
விஷக் கதண்டு கடித்ததால் விவசாயி உயிரிழப்பு!

சின்னதாராபுரம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் . இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷக் கதண்டு கடித்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
வீட்டிலிருந்த மகள் மாயம் தாயார் புகார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகள் வடிவுக்கரசி 17. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த வடிவுகரசி காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரின் தாயார் வசந்தா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப் பதிந்து விசாரணை.
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.