News September 15, 2025

விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட இனி ஆன்லைன்

image

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து நுழைவு சீட்டு பெறும் வசதியை விவேகானந்த கேந்திரம் செப்.11-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. yatra.com என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் என விவேகானந்தா கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 15, 2025

குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து குமரி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க… இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 15, 2025

குமரி மக்களே இதல்லாம் நம்பாதீங்க

image

குமரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: வீட்டில் இருந்தபடியே 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி telegram, whatsapp கணக்கில் லிங்க் கிளிக் செய்து போட்டிகள் நடத்தப்பட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறை சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!

News September 15, 2025

மார்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்

image

காஞ்சிரகோடு அருகே இலியான் விளையைச் சேர்ந்தவர் கஸ்தூரி (50). இவரது கணவர் குடிபோதையில் இவருடன் சண்டை போட்டு உள்ளார். அப்போது அவர் கத்தியால் கஸ்தூரி கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி உயிரிழந்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஸ்தூரி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!