News November 7, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்!

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
Similar News
News November 7, 2025
அரசியல் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி

<<18215650>>அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான<<>> வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதி. அதேபோல், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
News November 7, 2025
புன்முறுவல் அரசியே மானஸா!

தெலுங்கு வரவான மானஸா செளத்ரி, ‘ஆர்யன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தடம் பதித்துள்ளார். பயண ஆர்வலரான இவர், சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையில் கேஷுவலாக போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை மானசா SM-ல் பதிவிட்டுள்ள நிலையில், அவரது புன்முறுவலுக்கு ரசிகர்கள் அடிக்ட் ஆகியுள்ளனர். கனவு கன்னியாக மாறப் போகும் மானஸாவின் போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.
News November 7, 2025
இந்த 8 விஷயங்கள் இருந்தா நீங்களும் ஜெயிக்கலாம்

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நமது முயற்சியாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் அமையும் என்பார்கள். கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்ற இந்த 8 விஷயங்களை தினமும் கடைப்பிடியுங்க. ➤இலக்கில் தெளிவு / கவனம் ➤சுயவிமர்சனம் ➤பொறுமை ➤திட்டமிடுதல் ➤இடைவிடாத கற்றல் ➤பேச்சுத்திறன் ➤உடற்பயிற்சி ➤சரியான ஓய்வு. இதில் எவற்றை தொடர்ச்சியாக செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க


