News November 25, 2024

விவசாய சங்க தேர்தலுக்கான அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட 23 விவசாய சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வேட்பு மனுக்களை தொடர்பு உடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற நவ.,27,28 தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம். 28ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Similar News

News December 31, 2025

தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News December 31, 2025

தென்காசி: புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள்

image

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல் கூடாது. மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இரவு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனித்திற்கு..

image

நாளை ஜன.,1 (2026) ஆம் தேதி முதல் வண்டி எண் 12661, சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் 8.10க்கு பதில் இரவு 7.35 மணிக்கு கிளம்பி செங்கோட்டைக்கு காலை 6.40 மணிக்கு வந்து சேரும். அதே போல் வண்டி எண் 12662, செங்கோட்டையில் இருந்து கிளம்பும் நேரமும் மாலை 6.50 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!