News December 13, 2025
விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். இதில் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாவிட்டால் 22வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணபிக்குமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தல்.
Similar News
News March 8, 2026
தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

அம்மச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் ஜெயஸ்ரீ (19) இளங்கோவனின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஜெயஸ்ரீ நேற்று (மார்.7) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 8, 2026
தேனி: வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்பு.!

கோம்பை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜா (38). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (மார்ச்.6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 8, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 07.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.


