News August 16, 2025

விவசாயி வெட்டிக்கொலை – இருவர் கைது

image

பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துக்குமார்(47). இவருக்கு சொந்தமான தோப்பு வீட்டில் ஆனைமலையை சேர்ந்த வடிவேல், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். முத்துக்குமாரிடமிருந்து பணம் பெற்ற இருவரும் தராமல் இழுத்து வந்த நிலையில் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் நேற்று அவரை வெட்டி கொலை செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News August 16, 2025

ரூ.76,380 சம்பளம்: கோவை கூட்டுறவு சங்கத்தில் வேலை!

image

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 16, 2025

கோவை: உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்

image

கோவை மாணவர்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வருமான மற்றும் சாதிச் சான்றுகள் அவசியம். https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1800-599-7638 அழைக்கவும். இதனை ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது!

image

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக, காட்டூர் காவல்துறையினருக்கு, நேற்று முந்தினம் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில், தகவல் கிடைத்த இடத்தில் காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடபட வைத்த, குணசீலன் (51) ஷாலினி (34) என்பவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!