News April 5, 2024
விவசாயிடம் ரூ.2000 லஞ்சம்: விஏஓ கைது

பரமக்குடி தாலுகா காந்தி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாய கூலி தொழிலாளியான இவர் வாரிசு சான்று வேண்டி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தார். இது தொடர்பாக எமனேஸ்வரம் விஏஓ பூமிநாதனை அணுகினார். அவரது மனுவை மேலதிகாரிக்கு பரிந்துரைக்க ரூ.2000 லஞ்சம் கேட்டார். இதையடுத்து சந்திரசேகரிடம் ரூ.2000 லஞ்சம் பெற்ற பூமிநாதனை ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 20, 2025
மண்டபம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் முகாம்

மண்டபம், மறவர் தெரு கடற்கரை பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று ஆகஸ்ட் 19.08.2025 செவ்வாய்கிழமை முதல் 21.08.2025 வியாழன் கிழமை வரை ஆதார்கார்டு இல்லாத அல்லது புதுப்பிக்க வேண்டிய மாணவர்களுக்கு தபால் நிலையத்தில் இருந்து வந்து சிறப்பு சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கு கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
News August 20, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் நியமனம்

தமிழகம் முழுவதும் 27 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த ராஜ மனோகரனுக்கு பதிலாக தூத்துக்குடியில் பணிபுரிந்த முன்னாள் தனித்துணை ஆட்சியர் ஹபிபுர் ரஹ்மான் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
News August 19, 2025
ராம்நாடு: உங்கள் Phone மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <