News March 13, 2025
விவசாயிகள் 31க்குள் நிலம் விபரம் பதிவு செய்வது கட்டாயம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசின் மானியங்கள் பெற, விவசாய நிலங்கள் விவரங்களை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு, வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென, வேளாண்மைத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News March 10, 2026
செங்கல்பட்டில் இளைஞர் துடிதுடித்து பலி

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து விட்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது திம்மாவரம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் மோதியது. இதில் தினேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 10, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
செங்கை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


