News July 20, 2024

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் இன்று (ஜூலை20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள்  நெல், சோளம், நிலக்கடலை பயிர்களுக் காப்பீடு கட்டணத்தை செலுத்த வருகின்ற 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் & பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார் .

Similar News

News November 5, 2025

தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

News November 5, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (05.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் குப்புசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 5, 2025

தருமபுரி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

image

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!