News March 14, 2025
விவசாயிகள் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களைப் பெறுவதற்கு, தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்தல் விவசாயிகளின் பதிவு விவரங்களை மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய 31.03.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
தருமபுரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தருமபுரி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News April 7, 2026
அரூர் அருகே தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(53). இவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றபோது தீர்த்தமலை சாலையில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 7, 2026
தருமபுரி: 144 பேர் வேட்புமனு தாக்கல் – ஒரு பார்வை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மொத்தம் 144 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 111 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் அடங்குவர். அதில், தருமபுரியில் அதிகபட்சமாக 36 பேரும், பென்னாகரத்தில் 32, பாலக்கோட்டில் 31, பாப்பிரெட்டிப்பட்டியில் 23 மற்றும் அரூரில் 22 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


