News February 24, 2026
விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண் பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகளுக்கு அடையாள எண் அவசியம். இதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2026
திருநெல்வேலி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News February 24, 2026
பாளை தாசில்தார் அதிரடி இடமாற்றம்; கலெக்டர் உத்தரவு

நெல்லையில் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாளை தாசில்தார் இசைவாணி சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலராகவும், சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலர் இசக்கி பாண்டி பாளை தாசில்தாராகவும், நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆவுடையப்பன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர். கலெக்டர் சுகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News February 24, 2026
நெல்லை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!


