News October 25, 2024
விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (அக்.25) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொளத்தூர், பாலமலையில் அன்னாசிப்பழம் பயிர் சாகுபடி செய்வது குறித்த சாத்தியக்கூறுகளை வேளாண்மைதுறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News February 5, 2026
சேலம் வரும் விஜய்

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் வரும் 13-ம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கடிதம் வழங்கினார். கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா பரப்புரை பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில் விஜய் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
News February 5, 2026
சேலத்தில் மகளை கொன்ற கொடூர தந்தை

சேலத்தில் தனியார் ஹோமியோபதி கல்லூரியில் பயின்று வந்தவர் வர்ஷினி. இவர் கடந்த ஜன.7ம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மரணத்தில் வர்ஷினியின் தந்தை வரதராஜன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பவம் நடந்ததிலிருந்து வரதராஜன் தலைமறைவாக இருந்ததால், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News February 5, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்,
சேலம் மாவட்டத்தில் பிப்.5-ல் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளன.


