News October 24, 2024
விவசாயிகள் குறைதீர் முகாம்: தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த தங்கள் பிரச்னைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 17, 2026
தாம்பரத்தில் போலீஸ் மீது தாக்குதல்!

செங்கை: தாம்பரம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் செல்வகுமார் (56), இவர் நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் பேருந்து நிலைய உதவி மையத்தில் பணியில் இருந்தார். அப்போது, போதையில் இருந்த நபர் இவரிடம் தகராறு செய்து இவரை தாக்கியுள்ளோர். அங்கிருந்தோர், போதையில் இருந்த நபரை பிடித்து, தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் (35) என்பது தெரிந்தது.
News February 17, 2026
செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டில் வரும் (பிப்ரவரி 20) அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு பெறலாம். அனைத்து தொடர்புடைய துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு, மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 17, 2026
செங்கல்பட்டு: சாலை விபத்தில் தவெக நிர்வாகி பலி

செங்கல்பட்டு S.P. கோவில் அடுத்த கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், தவெக நிர்வாகியான இவர் (பிப்.15) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே தனது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது குறுக்கே வந்த ட்ரை சைக்கிள் மீது மோதியதில், ஸ்ரீதர் மற்றும் ட்ரை சைக்கிள் ஓட்டுநர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


